அசாமில் பொதுமக்கள் முன் நபரை உயிருடன் தீ வைத்து, எரித்து கொன்ற கொடூரம்


அசாமில் பொதுமக்கள் முன் நபரை உயிருடன் தீ வைத்து, எரித்து கொன்ற கொடூரம்
x

அசாமில் பெண் படுகொலையில் பொதுமக்கள் முன் நடந்த விசாரணையில் நபரை உயிருடன் தீ வைத்து, எரித்து கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.நகாவன்,

அசாமின் நகாவன் மாவட்டத்தில் போர் லாலங் காவன் பகுதியை சேர்ந்த நபர் ரஞ்சித் பர்தோலய். இவர் ஒரு பெண்ணை படுகொலை செய்து விட்டார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரை பொதுமக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அவர் மீது தீ வைத்து, கொளுத்தி கொன்று விட்டனர். இதன்பின்பு அவரது உடலை யாருக்கும் தெரியாத வகையில் புதைத்து விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து துணை போலீஸ் சூப்பிரெண்டு எம். தாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். ஒரு சிலரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதன்பின்னர், மாஜிஸ்திரேட் ஒருவர் மேற்பார்வையில், ரஞ்சித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அது 90 சதவீதம் எரிந்த நிலையில் காணப்பட்டது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story