உடுப்பி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 54 வழக்குகள் பதிவு


உடுப்பி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 54 வழக்குகள் பதிவு
x

உடுப்பி மாவட்டத்தில், கடந்த 15 நாட்களில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 54 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 54 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சித்தலிங்கப்பா கூறியதாவது:-

உடுப்பி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தன. இதனால் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இ

ந்த நிலையில் கடந்த 15 நாட்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 54 வழக்குகள் பதிவாகி செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக குந்தப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கங்கொள்ளி, பைந்தூர் பகுதிகளில் அதிகமாக உள்ளது. 20 வயது முதல் 30 வயதுடையவர்கள் போதைக்கு அடிமையாக உள்ளனர். அவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story