புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பு: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்


புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பு: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி புதிய வேண்டுகோள்
x

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்த பிரதமர் மோடி மக்கள் அனைவரும் எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினை தங்கள் குரல் பதிவோடு பகிருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இன்று பகிர்ந்துள்ளார். அதில் நாடாளுமன்றத்தின் உட்புறக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான எண்ணங்களை, உங்கள் பின்னணி குரலுடன் இந்த வீடியோவை அதிகம் பகிரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு நீங்கள் பகிரும் விடியோக்களில் சிலவற்றை நான் ரீ-ட்வீட் செய்வேன். எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஷேஷ்டேக்கை பயன்படுத்த மறைந்துவிட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

சுமார் 4 தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story