கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு
கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
மைசூரு,
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதன்காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. காவிரி படுகையில் உள்ள கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், குறைவான தண்ணீரே வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனிடையே, காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது கடந்த சில தினங்களுக்கு முன் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இரு அணைகளிலும் இருந்து தற்போது 10,811 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story