கேரளாவில் அதிகரித்து வரும் எரிசாராயம் பயன்பாடு - கடந்த 3 வருடங்களில் 59,436 லிட்டர் பறிமுதல்


கேரளாவில் அதிகரித்து வரும் எரிசாராயம் பயன்பாடு - கடந்த 3 வருடங்களில் 59,436 லிட்டர் பறிமுதல்
x

கேரளாவில் கொரோனா காலத்திற்கு பிறகு அதிக அளவு எரி சாராயம் சிக்கியுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட ஆல்கஹால் தட்டுப்பாட்டால், ஆல்கஹாலில் கலப்பதற்கும், வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கவும் எரிசாராயம் (ஸ்பிரிட்) பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஒரு லிட்டர் எரி சாராயம் 70 ரூபாய்க்கும், கள்ளச் சந்தையில் 205 ரூபாய் வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகின. இதையடுத்து கேரளாவில் எரிசாராயம் பயன்பாடு உள்ளதாக என போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், கேரளாவில் எர்ணாகுளம், பாலக்காடு உட்பட பல இடங்களில் 2018 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு 2022 வரை நடத்தப்பட்ட சோதனையில் 59,436 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story