தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி செலவழிக்க உள்ளதாக தகவல்!


தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி செலவழிக்க உள்ளதாக தகவல்!
x

2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூபாய் 2 டிரில்லியன் (ரூ.2 லட்சம் கோடி) செலவழிக்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

2022-23 நிதியாண்டில் கூடுதலாக ரூபாய் 2 டிரில்லியன் (ரூ.2 லட்சம் கோடி) செலவழிக்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் இந்த ஏப்ரல் மாதத்தில், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதேபோல, மொத்த விலை பணவீக்கம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூபாய் 2 லட்சம் கோடி தொகையை செலவழிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட அளவிலான முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

"பணவீக்கத்தைக் குறைப்பதில் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம். உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் யாருடைய கற்பனையையும் விட மோசமாக இருந்தது.

உரங்களுக்கு மானியம் வழங்க மேலும் ரூபாய் 500 பில்லியன்(ரூ. 50 ஆயிரம் கோடி) கூடுதல் நிதி தேவைப்படும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த மானியத்துக்கான தொகை ரூபாய் 2.15 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மற்றொரு சுற்று வரிக் குறைப்புகளையும் அரசாங்கம் வழங்கலாம். இதன்காரணமாக, ஏப்ரல் 1 அன்று தொடங்கிய 2022-23 நிதியாண்டில், இந்திய ரூபாய் 1 டிரில்லியன் முதல் 1.5 டிரில்லியன் அளவுக்கு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

இந்த நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக, அரசாங்கம் சந்தையில் இருந்து கூடுதல் தொகைகளை கடன் வாங்க வேண்டியிருக்கும். இதன்காரணமாக, 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% என்ற பற்றாக்குறை இலக்கில் மாற்றம் ஏற்படும்.

கூடுதல் கடன் வாங்குவது, இந்த ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் வாங்க திட்டமிடப்பட்டிருந்த ரூபாய் 8.45 டிரில்லியன் கடனைப் பாதிக்காது.2023ம் ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் கூடுதல் கடனை அரசு வாங்கலாம்."

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பட்ஜெட் அறிவிப்புகள் படி, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ரூபாய் 14.31 டிரில்லியன் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story