ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா! தஞ்சை பெரிய கோவில் உட்பட 100 நினைவுச் சின்னங்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம்!
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.
புதுடெல்லி,
ஜி20 தலைமையை இன்றுமுதல் இந்தியா ஏற்க உள்ளது.இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை மின் அலங்கார விளக்குகளால் ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச. 1) அதிகாரப்பூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் உட்பட நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.