கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 4 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்


கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 4 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்
x

கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 4 ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2.85 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.

கர்நாடக மேல்-சபையில் ெமாத்தம் 75 உறுப்பினர் பதவி இடங்கள் உள்ளன.

பகிரங்க பிரசாரம்

இதில் 11 நியமன உறுப்பினர் பதவி இடங்கள் ஆகும். மேலும் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வாகும் 25 உறுப்பினர் இடங்களும், பட்டதாரிகள் வாக்களித்து தேர்வாகும் 7 உறுப்பினர் இடங்களும், ஆசிரியர்கள் வாக்களித்து தேர்வாகும் 7 உறுப்பினர் இடங்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாக்களித்து தேர்வாகும் 25 உறுப்பினர் இடங்களும் உள்ளது.

இந்த நிைலயில் ேமல்-சபையில் காலியாகும் வடமேற்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரி, கர்நாடக வடமேற்கு ஆசிரியர், கர்நாடக மேற்கு ஆசிரியர் என 4 தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி (அதாவது நாளை) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான மனு தாக்கல் கடந்த மாதம்(மே) 10-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 69 பேர் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் தள்ளுபடி, வாபஸ் போக தேர்தல் களத்தில் மேல்-சபை முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட 49 பேர் உள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

2.85 லட்சம் வாக்காளர்கள்

இதற்கான ஓட்டுப்பதிவு நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 773 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 121 பேரும், பிற வாக்காளர்கள் 28 பேரும் உள்ளனர். 607 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகள் தாலுகா அலுவலகங்களிலும், சில இடங்களில் அரசு பள்ளிகளிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் கர்நாடக வடமேற்கு பட்டதாரி தொகுதியில் 99 ஆயிரத்து 598 வாக்காளர்களும், கர்நாடக தெற்கு பட்டதாரி தொகுதியில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 963 வாக்குகளும், கர்நாடக வடமேற்கு ஆசிரியர் தொகுதியில் 25 ஆயிரத்து 388 வாக்காளர்களும், கர்நாடக மேற்கு ஆசிரியர் தொகுதியில் 17 ஆயிரத்து 973 வாக்காளர்களும் உள்ளனர்.

அடையாள அட்டை

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அடையாள அட்டை, பல்கலைக்கழகங்கள் வழங்கிய கல்வி சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்கு எண்ணும் ைமயங்கள்

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தகுதியான வாக்காளர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பெலகாவி மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளன. அதாவது கர்நாடக தெற்கு பட்டதாரி தொகுதி வாக்குகள் மட்டும் மைசூருவில் உள்ள மகாராணி பெண்கள் வணிக கல்லூரியில் எண்ணப்படும். மீதமுள்ள 3 தொகுதிகளின் வாக்குகள் பெலகாவியில் உள்ள ஜோதி பி.யூ.கல்லூரியில் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.


Next Story