கர்நாடகத்தில் 1,000-க்கு கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் 1,000-க்கு கீழ் சரிந்த  கொரோனா பாதிப்பு
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1,000-க்கு கீழ் சரிந்தது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 26 ஆயிரத்து 61 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பெங்களூருவில் 871 பேர், மைசூருவில் 22 பேர், தட்சிண கன்னடாவில் 14 பேர் உள்பட 975 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 39 லட்சத்து 71 ஆயிரத்து 459 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிவமொக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இறந்தார். இதுவரை 40 ஆயிரத்து 77 பேர் இறந்து உள்ளனர். 668 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 39 லட்சத்து 24 ஆயிரத்து 900 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 6 ஆயிரத்து 440 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.


Next Story