ஜார்க்கண்ட்: பைக் மீது மோதி விட்டு தப்பும் முயற்சியில் கவிழ்ந்த லாரி; ஒருவர் பலி


ஜார்க்கண்ட்:  பைக் மீது மோதி விட்டு தப்பும் முயற்சியில் கவிழ்ந்த லாரி; ஒருவர் பலி
x
தினத்தந்தி 27 Nov 2023 2:29 AM GMT (Updated: 27 Nov 2023 2:40 AM GMT)

கோல்பட்டாவின் பாபனியா பகுதியை சேர்ந்த பிரேம் குமார் பவான் என்பவர் பலியானார்.

கொட்டா,

ஜார்க்கண்டின் கொட்டா மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. அந்த லாரி லால்மதியா பகுதியில் வந்தபோது, பைக் ஒன்றின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில், கோல்பட்டாவின் பாபனியா பகுதியை சேர்ந்த பிரேம் குமார் பவான் (வயது 46) என்பவர் சிக்கி காயமடைந்து உள்ளார். அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, லாரி ஓட்டுநர் சம்பவ பகுதியில் இருந்து தப்ப முயன்றார். இதில், அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர்.

லாரி ஓட்டுநர் விகாஷ், கிளீனர் அமன் கிஸ்கு உள்ளிட்டோரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பிரேமின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story