ஜம்மு காஷ்மீரில் பாலம் இடிந்து விபத்து - 80 பேர் படுகாயம் என தகவல்
ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் நடைமேம்பாலம் சரிந்து விபத்து ஏற்பட்டது.
ஜம்மு,
ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் நடைமேம்பாலம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், 20 முதல் 25 பேர் வரை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் சென்றதால் இரும்பு பாலம் சரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பைசாகி கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டமாக பாலத்தில் ஏறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story