ஆர்.சி.பி.சிங் ராஜினாமா எதிரொலி: உருக்குத்துறை மந்திரியாக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு


ஆர்.சி.பி.சிங் ராஜினாமா எதிரொலி: உருக்குத்துறை மந்திரியாக ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பேற்பு
x

உருக்குத்துறை இலாகா, சிவில் விமான போக்குவரத்து மந்திரி ேஜாதிராதித்ய சிந்தியாவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய உருக்குத்துறை மந்திரியாக இருந்த ஆர்.சி.பி.சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த உருக்குத்துறை இலாகா, சிவில் விமான போக்குவரத்து மந்திரி ேஜாதிராதித்ய சிந்தியாவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி நேற்று அவர் உருக்குத்துறை மந்திரி பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொண்டார். இதற்காக உத்யோக் பவனில் உள்ள உருக்குத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு சென்ற அவர், அங்கு முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றார்.

பின்னர் அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பிரதமரின் வழிகாட்டுதலின்படி உருக்குத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் இந்த புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.


Next Story