பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு 6-வது வார தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிப்பு


பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு 6-வது வார தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிப்பு
x

கோப்புப்படம்

கொச்சியில் பிறந்து 8 நாட்களேயான குழந்தைக்கு 6-வது வார தடுப்பூசி செலுத்தப்பட்டதால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொச்சி,

கேரள மாநிலம் கொச்சியின் எடப்பள்ளியில் உள்ள குடும்ப நல மையத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தைக்கு தவறுதலாக ஆறாவது வார தடுப்பூசி செலுத்தப்பட்டதால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

குழந்தையின் குடும்பத்தினர், குழந்தைக்கு முதல் வாரத்திற்கு பதிலாக ஆறாவது வாரத்திற்குரிய தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். தவறான டோஸ் செலுத்தப்பட்டதால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

குழந்தை தற்போது எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதார நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தையின் குடும்பத்தினர் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் உள்ள குடும்ப நல மையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க சுகாதார நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


Next Story