எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைப்பு
x

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2022 மீது மாநிலங்களவைவில் பரிசீலனை மற்றும் நிறைவேற்றுவதற்காக விவாதம் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், "இந்த மசோதா ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், விளையாட்டு வீரர்களுக்கு காலக்கெடுவுக்கான நீதி, ஊக்கமருந்துக்கு எதிராக போராடுவதில் முகவர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நிறுவன திறன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனரகம் போன்ற மத்திய அமைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ள மசோதா

* எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, 2022 மசோதா அறிமுகப்படுத்தப்படும்

* மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) மசோதா, 2022 பரிசீலனை மற்றும் நிறைவேற்றம்


Next Story