உ.பி.: குடிபோதையில் தாயை சுட்டுக்கொன்ற மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் தாயை சுட்டுக்கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம், சௌவியா பகுதியில் உள்ள கிராமத்தில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் தனது தாயை எதிர்பாராதவிதமாக சுட்டுக் கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அங்குள்ள நாக்லா மர்தான் கிராமத்தில் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலீசாரின் விசாரணையில், குடிபோதையில் இருந்த ஷிவ்பிரதாப், தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி சுடத் தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தாயார் ஊர்மிளா தேவியை (60) சுட்டார்.
இதில் ஊர்மிளா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை போலீசார் தேடி வருவதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்
Related Tags :
Next Story