மங்களூரு மாநகராட்சி சூரத்கல் மண்டல அலுவலக திறப்பு விழா; மந்திரி சுனில்குமார் கலந்துகொண்டார்


மங்களூரு மாநகராட்சி சூரத்கல் மண்டல அலுவலக திறப்பு விழா; மந்திரி சுனில்குமார் கலந்துகொண்டார்
x

மங்களூரு மாநகராட்சி சூரத்கல் மண்டல அலுவலக திறப்பு விழாவை மந்திரி சுனில்குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

மங்களூரு;


மங்களூரு மாநகராட்சியின் சூரத்கல் மண்டல அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி சுனில்குமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், 'சூரத்கல்லில் உயர் தொழில்நுட்ப மாநகராட்சிமண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகள் மக்களுக்கு உடனடியாக கிடைக்க இந்த அலுவலகம் உதவியாக இருக்கும்' என்றார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட பரத்ஷெட்டி எம்.எல்.ஏ. கூறுகையில், சூரத்கல் மண்டல அலுவலகம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூரத்கல் மக்களின் நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறி உள்ளது என்றார்.


Next Story