கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ள மணிப்பூரில் 29-ந் தேதி சட்டசபை கூடுகிறது


கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ள மணிப்பூரில் 29-ந் தேதி சட்டசபை கூடுகிறது
x

கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ள மணிப்பூரில் வரும் 29-ந் தேதி சட்டசபை கூடுகிறது.

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையில் கடந்த மே மாதம் 3-ந் தேதி ஏற்பட்ட கலவரம் இன்னும் தொடர்கிறது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த சூழலில் மணிப்பூர் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஆகஸ்டு 21-ந் தேதி கூட்ட கவர்னருக்கு மாநில மந்திரி சபை பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாததால் நேற்று முன்தினம் சட்டசபை கூடவில்லை.

இதனால் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையிலான மந்திரி சபை உடனடியாக கூடி இது குறித்து ஆலோசித்தது. அதனை தொடர்ந்து, ஆகஸ்டு 29-ந் தேதி சட்டமன்றத்தை கூட்ட கவர்னருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை ஏற்று, ஆகஸ்டு 29-ந் தேதி சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தொடங்க கவர்னர் அனுசுயா உய்கே நேற்று அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "12-வது மணிப்பூர் சட்டமன்றத்தின் 4வது கூட்டத்தொடரை ஆகஸ்டு 29-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு கூட்டுமாறு கவர்னர் அழைப்பு விடுக்கிறார்" என கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story