மீன், இறைச்சி விற்க தடை: மத்திய பிரதேச அரசுக்கு மாயாவதி கண்டனம்
மாநிலத்தில் திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதித்து உள்ளது.
லக்னோ,
மத்திய பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா அரசு, மாநிலத்தில் திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதித்து உள்ளது. புதிய அரசின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பா.ஜனதா அரசின் இந்த நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'மத்திய பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜனதா அரசு, வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பிற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிப்பதற்கு பதிலாக, வேலையில்லா திண்டாட்டத்தால் மீன், முட்டை, இறைச்சி விற்று சுயதொழிலில் ஈடுபட்டு வரும் அவர்களை ஒடுக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது. இது எப்படி சரியாக இருக்கும்? சர்ச்சைக்குரிய இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story