கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் இறைச்சி கடைக்கு 'சீல்'


கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் இறைச்சி கடைக்கு சீல்
x
தினத்தந்தி 5 March 2023 12:15 PM IST (Updated: 5 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேவில் கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் இறைச்சி கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்..

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் அல்தாப். இவர் சிக்கமகளூரு செல்லும் சாலையில் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்தநிலையில் இவர் இறைச்சி கழிவுகளை அப்பகுதியில் கொட்டி வைத்துள்ளார். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் டவுன் பஞ்சாயத்து கமிஷனரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் அல்தாப்பின் இறைச்சி கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அல்தாப் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார். கடைக்கு சீல் வைத்தால் தனது வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து அந்தப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருந்தால் கடையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட அல்தாப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.



Next Story