2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!


2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!
x

பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், இரண்டு ஜாட் இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வகுப்புவாத கலவரம் நடந்தது.

சம்பவத்தன்று காவால் கிராமத்தில் இரண்டு ஜாட் இளைஞர்களின் தகனம் முடிந்து மக்கள் கூட்டம் திரும்பிக் கொண்டிருந்த போது வன்முறை ஏற்பட்டது. அதில் 60 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

பல பேரை காவு வாங்கிய இந்த பெரும் வன்முறையில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி மற்றும் 26 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையை எதிர்கொண்டனர்.

விக்ரம் சைனி உத்தரபிரதேசத்தில் உள்ள கட்டவுலியைச் சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ ஆவார். இந்த வழக்கின் விசரணை நடபெற்று வரும் நிலையில், அவர் ஜாமீனில் இருந்தார்.

2013ம் ஆண்டு முசாபர்நகர் கலவர வழக்கில் விக்ரம் சைனி மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், விக்ரம் சைனி மற்றும் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து எம்.பி - எம்எல்ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கோபால் உபாத்யாய், கலவரம் மற்றும் பிற குற்றங்களுக்காக விக்ரம் சைனி மற்றும் 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தார்.மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரை போதிய ஆதாரம் இல்லாததால் கோர்ட்டு விடுவித்தது.

இதனையடுத்து, பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை என்பதால், பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனிக்கு ஜாமீன் கிடைத்தது.


Next Story