கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!


கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
x
தினத்தந்தி 19 May 2022 12:28 PM IST (Updated: 19 May 2022 12:38 PM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும், அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், கணித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு' அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதை கருத்தில் கொண்டும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஒரு நாள் முன்பு பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

மழை குறையும் வரை மக்கள் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளுக்கும், கடல் அலைகள் அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என்றும், கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட ஐந்து நாட்களுக்கு முன்னதாக, மே 27 ஆம் தேதிக்குள் முதல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story