திருப்பதியில் நிர்மலா சீதாராமன் - தரிசனம் முடிந்து பின் பக்தர்களுடன் உரையாடல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
மத்திய நிதி மத்திரி நிர்மலா சீதாராமன், நேற்றிரவு திருப்பதிக்கு வருகை தந்து நேற்று ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்தார்.
ரங்கநாயக மண்டபத்தில் நிதி மந்திரிக்கு ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் நின்றிருந்த பக்தர்களுடன் உரையாடிய அவர், சிறுவனுக்கு லட்டு வழங்கினார்.
முன்னதாக, கோவிலுக்கு வருகை தந்த நிதி மந்திரியை தேவஸ்தான அரங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வரவேற்றார்.
Related Tags :
Next Story