நானும் முதல்-மந்திரியாக ஆசைப்படவில்லை 'நிதிஷ் குமார், பிரதமராக விரும்பவில்லை' தேஜஸ்வி யாதவ்


நானும் முதல்-மந்திரியாக ஆசைப்படவில்லை நிதிஷ் குமார், பிரதமராக விரும்பவில்லை தேஜஸ்வி யாதவ்
x

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்து இருந்தார்.

பாட்னா,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க உள்ளதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்து இருந்தார். அதேநேரம் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தான் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இதை பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வியும் தற்போது உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அவர் (நிதிஷ் குமார்) பிரதமராகவோ, நான் முதல்-மந்திரியாகவோ விரும்பவில்லை. தற்போது இருக்கும் பதவிகளிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று கூறினார்.

தங்கள் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், தனது சகோதரிகளின் நகைகளை கூட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story