பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பி.எப்.ஐ அமைப்பு சதித்திட்டம்: அமலாக்கத்துறை


பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பி.எப்.ஐ அமைப்பு சதித்திட்டம்: அமலாக்கத்துறை
x

பிரதமர் மோடி தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த ஷபீக் பையத், கடந்த வியாழக்கிழமை அமலாகக்த்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கேரளாவில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த ஷாபிக் பயேத் என்பவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், ஜூலை 12ல் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

மேலும் பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து உத்தரப் பிரதேசத்தில் பதற்றமான இடங்களிலும், முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் பிஎஃப்ஐ அமைப்பு தொடர்புடைய வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ.120 கோடி பணம் வந்துள்ளதாகவும், அதில் கணிசமான தொகை டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


Next Story