செழுமை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் கொண்டாட்டமாகும் - பினராயி விஜயன் ஓணம் வாழ்த்து


செழுமை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் கொண்டாட்டமாகும் - பினராயி விஜயன் ஓணம் வாழ்த்து
x

ஓணம் பண்டிகைக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் பண்டிகை ஆகும். இந்நாளை பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஓணம் பண்டிகை கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இன்று ஓணம் விருந்து படைத்து மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி முடிப்பார்கள்.

இப்பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ஓணம் பண்டிகைக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "ஓணம் என்பது செழுமை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் கொண்டாட்டமாகும். சாதி, மதப் பிரிவினைகளைக் கடந்து மனித ஒற்றுமையை வலுப்படுத்த ஓணம் நம்மைத் தூண்ட வேண்டும்.

கொண்டாட்டங்கள் பிரிவினை எண்ணங்களால் மாசுபடாத மனங்களின் கூட்டமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் அன்புடன் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.


Next Story