பிரபல கட்டிடக் கலை நிபுணர் பி.வி.தோஷி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பிரபல கட்டிடக் கலை நிபுணர் டாக்டர் பி.வி.தோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரபல கட்டிடக்கலை நிபுணரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் பால்கிருஷ்ண தோஷி (பி.வி.தோஷி) இன்று காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "டாக்டர் பி.வி.தோஷி மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணராகவும், பல்வேறு நிறுவனங்களை நிர்மாணித்தவராகவும் திகழ்ந்தவர். இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட நுட்பமான சிறந்த பணிகள் மூலம் வருங்கால தலைமுறையினர் கட்டிடக்கலை நுட்பத்தை அறிந்து கொள்வார்கள். அவருடைய மறைவு வருத்தமளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story