ஊழல் இல்லாத இந்தியாவே எனது கொள்கை: பிரதமர் மோடி சுதந்திர தின உரை


தினத்தந்தி 15 Aug 2023 1:41 AM GMT (Updated: 15 Aug 2023 5:21 AM GMT)

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.


Live Updates

  • 15 Aug 2023 2:17 AM GMT

    மணிப்பூரில் அமைதியை கொண்டு வர மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி

  • 15 Aug 2023 2:16 AM GMT

    மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும்: பிரதமர் மோடி சுதந்திர தின உரை

    மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பேசினார்.

  • 15 Aug 2023 2:06 AM GMT

    டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையற்றி வருகிறார்

  • டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
    15 Aug 2023 2:05 AM GMT

    டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

    புதுடெல்லி,

    இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதிகள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் பிரதமராக சுதந்திர தினத்தன்று 10-வது முறை பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    15 Aug 2023 1:59 AM GMT

    சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்! என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • 15 Aug 2023 1:56 AM GMT

    தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டைக்கு வருகை

  • 15 Aug 2023 1:53 AM GMT

    டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி

  • 15 Aug 2023 1:48 AM GMT

    டெல்லி செங்கோட்டை நோக்கி தனது வாகனத்தில் பிரதமர் மோடி புறப்பட்டார். 

  • 15 Aug 2023 1:45 AM GMT

    சுதந்திர தின உரை நிகழ்த்த டெல்லி செங்கோட்டை செல்லும் முன்பாக பிரதமர் மோடி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.



Next Story