தமிழ் புத்தாண்டு தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து


தமிழ் புத்தாண்டு தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
x

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

இதையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும், சக குடிமக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்புவதற்கும் நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.


Next Story