டோக்கியோவில் 24-ந் தேதி'குவாட்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்


டோக்கியோவில் 24-ந் தேதிகுவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
x

டோக்கியோவில் 24-ந் தேதி நடைபெறவுள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா , ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் 'குவாட்' நாடுகள் என்று அழைக் கப்படுகின்றன. இந்த நாட்டு தலைவர்களின் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இம்மாதம் 24-ந் தே தி நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந் து கொள்கிறார். இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலக பிரச்சினைகள் குறித்து 'குவாட்' தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள இம்மாநாடு நல்ல வாய்ப்பாக அமையும். ஜப்பான் பிரதமர் புமியோகிஷிடா, அமெ ரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக இருதரப்பு ஆலோசனை மேற்கொள்வார். ஆஸ்திரே லியா பிரதமர் ஸ்காட் மாரிசனை யும் அவர் சந்தித்து பேச வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story