சிக்கமகளூரு பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம்


சிக்கமகளூரு பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம்
x

2023-24-ம் ஆண்டுக்கான சிக்கமகளூரு பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.

சிக்மகளூரு:-

கருத்து கேட்கும் கூட்டம்

சிக்கமகளூரு நகரசபையில் 2023-24-ம் ஆண்டுக்காான பட்ஜெட் குறித்து நகரசபை தலைவர் வேணுகோபால், நகரசபை கமிஷனர் பசவராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், தொழில்துறையினர் என பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், சிக்கமகளூரு பட்ஜெட் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

5 குளங்களை தூர்வாரி...

அப்போது பி.எஸ்.பி. கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், எகட்டி அணையில் இருந்து சிக்கமகளூருவுக்கு பல கோடி ரூபாய் செலவில் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால், சிக்கமகளூரு அருகே உள்ள 5 குளங்களை தூர்வாரி முறையாக பராமரித்தால், அங்கிருந்து சிக்கமகளூரு நகருக்கு குடிநீர் கொண்டு வரலாம். இதன்மூலம் குடிநீர் பற்றாக்குறை தீரும். மேலும் செலவும் குறையும் என்றார்.

பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், நகா் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பசுமையாக மாற்ற திட்டம் கொண்டு வர வேண்டும். நகரில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வண்டும் என்று தெரிவித்தார். மேலும், சிக்கமகளூரு நகரின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உறுதி

இந்த கருத்துகளை கேட்ட நகரசபை தலைவர் வேணுகோபால், நகரசபை கமிஷனர் பசவராஜ், வருகிற பட்ஜெட்டில் சிக்கமகளூரு நகரின் வளர்ச்சிக்கு பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.


Next Story