பஞ்சாப்: கால்வாயில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் உயிரிழப்பு
சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது . விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் பீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் திடீரென கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது . விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தின்போது மழை பெய்து கொண்டிருந்ததால் விபத்து நேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறது.
இதுகுறித்து முக்த்சார் துணை கமிஷனர் ரூஹீ டக் கூறுகையில், "கால்வாயில் பலத்த நீரோட்டத்தால் சில பயணிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காயம் அடைந்த சில பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .
Related Tags :
Next Story