பஞ்சாப்: கார் மீது பைக் மோதி விபத்து - 5 வயது குழந்தை பலி
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் பைக் மீது கார் மோதிய விபத்தில் 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லெஹ்ராககாவில் வசிக்கும் கணவன், மனைவி தங்களுடைய ஐந்து வயது குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், அவர்களின் பைக் மீது மோதியது. இதையடுத்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கார் டிரைவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் முனாக்-சண்டிகர் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர், மேலும் சாலையில் இதற்கு முன்பு பல விபத்துக்கள் நடந்ததாகக் கூறினர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.