கேரளாவில் 12-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி...!


கேரளாவில் 12-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி...!
x
தினத்தந்தி 19 Sept 2022 8:07 AM IST (Updated: 19 Sept 2022 8:12 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 12-வது நாளாக ஆலப்புழா மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

கேரளாவில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரையை' கடந்த 11-நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ராகுல்காந்தியின் 11-வது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது. இந்த பாதயாத்திரையில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த பாதயாத்திரை நேற்று இரவு ஆலப்புழா, புன்னப்புரா பகுதியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இன்று 12-வது நாளாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா அரவுகாட்டில் இருந்து மீண்டும் 'பாரத் ஜோடோ யாத்திரை'யைத் தொடங்கினார்.


Next Story