சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து


சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ்  ரெயில் தடம் புரண்டு விபத்து
x
தினத்தந்தி 18 March 2024 3:56 AM GMT (Updated: 18 March 2024 8:01 AM GMT)

ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ஜோத்பூர்,

ராஜஸ்தானின் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ரெயில் பயணிகள் விவரம் அறிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 0145-2429642 என்ற எண்ணை ரெயில்வே அறிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகள் மீட்கப்பட்டு தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அவ்வழியாக சென்ற ரெயில்கள் தாமதம் ஆகின. ரெயிலின் என்ஜின் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் தடம் புரண்டதாகவும் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறினர். இந்த ரெயில் விபத்து காரணமாக 6 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.


Next Story