தம்பதியிடம் ரூ.2½ லட்சம் நகை, பணம் பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு


தம்பதியிடம் ரூ.2½ லட்சம் நகை, பணம் பறிப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
x

போலீஸ் போல் நடித்து தம்பதியிடம் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;

போலீசார் போல் நடித்து...

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா நூலேனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத், விவசாயி. இவரது மனைவியின் தங்க தாலி சங்கிலி அறுந்துவிட்டது. இந்த நிலையில் நேற்று அந்த தாலி சங்கிலியை பழுது பார்க்க விஸ்வநாத், தனது மனைவியுடன் சிதரவள்ளி பகுதியில் உள்ள நகைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது தங்க தாலிசங்கிலி மற்றும் கூடுதலாக ரூ.75 ஆயிரம் எடுத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.சிதரவள்ளி பகுதியில் சாலையில் சென்றபோது திடீரென்று 2 பேர் விஸ்வநாத்தின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினா். பின்னர் அந்த நபர்கள், தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.


நகை, பணம் பறிப்பு

மேலும் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. உங்களிடம் கஞ்சா இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உங்களை சோதனை செய்யவேண்டும் என்று கூறி, விஸ்வநாத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் தாலிசங்கிலி மற்றும் அவர் கையில் அணிந்திருந்த 2 தங்க மோதிரத்தை பறித்துகொண்டு தப்பிசென்றுவிட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து அவர்கள், சித்ரவள்ளி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story