தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!


தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!
x

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 364 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.

டெல்லி விமானநிலைய பகுதியில் காற்றின் தரக் குறியீடு 333ஆக பதிவாகியுள்ளது. நொய்டாவில் 393ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது. குருகிராமில் 318 ஆக பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல காற்றுமாசு காரணமாக தூசி நிறைந்து காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதன் காரணமாக, காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.


Next Story