தெலுங்கானா பா.ஜ.க. முக்கிய பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை


தெலுங்கானா பா.ஜ.க. முக்கிய பிரமுகர் தூக்கு போட்டு தற்கொலை
x

தெலுங்கானா பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



ஐதராபாத்,



தெலுங்கானாவில் மியாபூர் நகரில் ஆல்வின் காலனியில் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் மியாபூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்றது. இதுபற்றி போலீசார் கூறும்போது, தகவல் கிடைத்ததும், தனி படையொன்று சம்பவ பகுதிக்கு சென்றது.

இதில், மியாபூர் எல்லைக்கு உட்பட்ட தனது இல்லத்தில் ஒருவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை. குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், அவர் கடந்த சில நாட்களாக இந்த இல்லத்திலேயே வசித்திருக்கிறார் என தெரிவித்து உள்ளனர். தெலுங்கானா பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வந்த ஞானேந்திர பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செர்லிங்கம்பள்ளி தொகுதியை சேர்ந்த அவர், கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, போலீசார் அவரது உடலை மீட்டு உள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரசாத் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது உதவியாளரிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி விட்டு தூங்க சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரம் அவர் வெளியே வராத நிலையில், ஜன்னல் பகுதியை உடைத்து கொண்டு உதவியாளர் உள்ளே சென்றுள்ளார். பிரசாத் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்பு போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார்.


Next Story