22 நாட்களாக பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது; சிறுத்தையை பிடிக்க நூதன முறையை கையில் எடுக்கும் வனத்துறையினர்


22 நாட்களாக பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது; சிறுத்தையை பிடிக்க நூதன முறையை கையில் எடுக்கும் வனத்துறையினர்
x

22 நாட்களாக பிடிபடாமல் போக்கு காட்டி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நூதன முறையை கையில் எடுத்துள்ளனர்.

பெலகாவி:

சிறுத்தை நடமாட்டம்

பெலகாவி டவுன் ஜாதவ் நகருக்குள் கடந்த 5-ந் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை தொழிலாளி ஒருவரை தாக்கியது. மேலும் ஜாதவ்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அது உலா வந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இதன்பின்னர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், போலீசார் இணைந்து ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை சாலையில் குறுக்கே அதிவேகமாக ஓடி தப்பியது. வனத்துறையில் அதை தவறவிட்டனர். இதையடுத்து 8 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சிறுத்தை வனத்துறையினர் கண்ணில் சிக்கியது. வனத்துறையினர் அதை பிடிக்க முயன்றனர். அதற்குள் அங்கிருந்து சிறுத்தை தப்பித்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

நூதன முறை...

இந்த நிலையில் தற்போது சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பெண் சிறுத்தையில் சிறுநீரை அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் தெளித்து, அதன் மனத்தால் சிறுத்தை நிச்சயம் அங்கு வரும் என வனத்துறையினர் கூறி உள்ளனர்.

கடந்த 22 நாட்களில் 4 முறை சிறுத்தை வனத்துறை கண்களில் பட்டபோது, அவர்கள் சிறுத்தையை பிடிக்க தயக்கம் காட்டுவதாக அந்த பகுதியில் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவர்கள் சிறுத்தை பீதியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறினர்.


Next Story