ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மேல்நோக்கி செல்லும் அதிசயம்


ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மேல்நோக்கி செல்லும் அதிசயம்
x

ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மேல்நோக்கி செல்லும் அதிசயம் நடக்கிறது.

சிவமொக்கா: ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மேல்நோக்கி செல்லும் அதிசயம் நடக்கிறது.

ஜோக் நீர்வீழ்ச்சி

சிவமொக்கா மாவட்டம் சாகர் அருகே பசுமையான பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள் நடுவே ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் 4 கிளைகளாக பிரிந்து விழுகிறது. அந்த 4 நீர்வீழ்ச்சிகளுக்கும் ரோஜர், ராக்கெட், ராஜா, ராணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கிவிட்டது போல் குறைவான நீர் மட்டுமே விழுகிறது.

இந்த நிலையில், ஜோக் நீர்வீழ்ச்சியில் 4 அருவியிலும் விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல்நோக்கி காற்றில் செல்லும் அதிசய நிகழ்வு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

மேல்நோக்கி செல்லும் அதிசயம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இர்பான் ஜோக் என்பவர் கூறுகையில், 'கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. அப்போது இரு அருவியில் தான் தண்ணீர் மேல்நோக்கி சென்றது. தற்போது 4 அருவிகளில் விழும் நீரும் மேல்நோக்கி சீறிப்பாய்கிறது. இது இயற்கையின் செயல்' என்றார். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டதால், ஜோக் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

இந்த நிலையில் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் மேல்நோக்கி பீய்ச்சி அடிக்கும் அதிசய நிகழ்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


Next Story