தெற்கே தனி நாடு வேண்டும்; பட்ஜெட் தாக்கலுக்கு பின் கர்நாடக எம்.பி. சர்ச்சை பேச்சு


தெற்கே தனி நாடு வேண்டும்; பட்ஜெட் தாக்கலுக்கு பின் கர்நாடக எம்.பி. சர்ச்சை பேச்சு
x

வளர்ச்சிக்கான எங்களுடைய பங்கு பணம், வடஇந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. டி.கே. சுரேஷ் குமார் இடைக்கால பட்ஜெட் தாக்கலான பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்னிந்தியாவுக்கு அனைத்து நிலைகளிலும், அனைத்து விவகாரங்களிலும் அநீதி இழைக்கப்படுகிறது.

எங்களுடைய பணம் எங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். அது ஜி.எஸ்.டி.யோ, சுங்க வரியோ அல்லது நேரடி வரியோ, எங்களுடைய சரியான பங்கு எங்களுக்கு வேண்டும். வளர்ச்சிக்கான எங்களுடைய பங்கு பணம், வடஇந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

வருகிற நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால், இந்தி பேசும் பகுதிகள் நம் மீது கட்டாயப்படுத்தும் சூழலின் முடிவால், தனிநாடுக்கான கோரிக்கையை நாம் முன் வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, மாநிலங்களுக்கு சேர வேண்டிய மத்திய நிதியின் பங்குகள் பற்றி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறி வரும் புகாரை எதிரொலித்து வருகிறது. இதே புகாரானது கேரளாவில் இருந்தும் வந்தது.

கர்நாடகா, பல்வேறு வழிகளிலும் ரூ.4 லட்சம் கோடி வரியை உற்பத்தி செய்தபோதும், கர்நாடகம் பெறுவதற்கு தகுதி வாய்ந்த ரூ.1 லட்சம் கோடிக்கு பதிலாக, மொத்தத்தில் ரூ.50 ஆயிரத்து 257 கோடியையே பெற கூடிய நிலை காணப்படுகிறது என்று காங்கிரசின் செய்தி தொடர்பாளர் லட்சுமணா சமீபத்தில் கூறினார்.


Next Story