விடைத்தாள் மறுமதிப்பீடு: கர்நாடகத்தில் மேலும் 72 எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் முழு மதிப்பெண்


விடைத்தாள் மறுமதிப்பீடு: கர்நாடகத்தில் மேலும் 72 எஸ்.எஸ்.எல்.சி.  மாணவர்கள் முழு மதிப்பெண்
x

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மேலும் 72 மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைத்துள்ளது. இதனால் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மேலும் 72 மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைத்துள்ளது. இதனால் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

முழு மதிப்பெண்

கர்நாடகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதில் 145 மாணவ-மாணவிகள் 625-க்கு 625 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர். இந்த நிலையில் மதிப்பெண் குறைவாக இருப்பதாக பல மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யுமாறு கோரினர். இதையடுத்து அந்த மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

இதில் மேலும் 72 மாணவர்கள் முழு மதிப்பெண் அதாவது 625-க்கு 625 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் முழு மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் அந்த ஆசிரியர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை

மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை 309 ஆகவும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை 472 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 6 பேர் மட்டுமே மாநில அளவில் முழு மதிப்பெண் எடுத்தனர். ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு முழு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



Next Story