மாடுகளை வேட்டையாடும் புலி..! நடவடிக்கை எடுக்காத வனத்துறை...! .. கேரளாவில் பரபரப்பு
பகல் நேரத்திலும் தனியாக வெளியில் செல்ல முடியவில்லை என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இடுக்கி,
கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள மூணாறு தேயிலை தோட்டப்பகுதிகளில் புலியின் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்திற்கும் அதிகமான மாடுகளை புலி வேட்டையாடி கொன்றுள்ளதாகவும் இதனால் இரவில் வீட்டை வீட்டு வெளியேறுவதில்லை என்றும், பகல் நேரத்திலும் தனியாக வெளியில் செல்ல முடியவில்லை என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் புலியின் நடமாட்டத்தை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story