திரிபுரா சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 69.96% சதவீத வாக்குகள் பதிவு


திரிபுரா சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி 69.96% சதவீத வாக்குகள் பதிவு
x

திரிபுரா சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் வருகிற மார்ச் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 69.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.


Next Story