ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரி இரண்டு நாள் பயணமாக இந்திய வருகை


ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரி இரண்டு நாள் பயணமாக இந்திய வருகை
x
தினத்தந்தி 21 Nov 2022 11:29 AM GMT (Updated: 21 Nov 2022 11:44 AM GMT)

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

புதுடெல்லி,

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை மந்திரி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சுற்றுப்பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் அப்துல்லாவுடன் உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் குழுவும் வருகை தந்துள்ளது. இந்த சுற்றுப்பயனத்தின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை ஷேக் அப்துல்லா சந்தித்து பேசுகிறார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வழக்கமான ஆலோசனையின் ஒரு அங்கமாக இந்த பயணம் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யானை சந்தித்துப் பேசியிருந்தார்.


Next Story