தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டம்
ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தவ் தாக்கரே திட்டமிட்டுள்ளார்.
புதுடெல்லி,
மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பமாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி ஷிண்டே அணிக்கு சென்று இருப்பது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேயின் தந்தை பால் தாக்கரேயால் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டு மராட்டியத்தில் கோலோச்சி வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும், அப்போது வெற்றி எங்கள் கைவசம் வரும் என்றும் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்தார்.
Related Tags :
Next Story