உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்


உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்
x

ரஷியாவின் படையெடுப்பை தொடர்ந்து, உக்ரைன் மருத்துவ கல்லூரிகளில் படித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

புதுடெல்லி,

ரஷியாவின் படையெடுப்பை தொடர்ந்து, உக்ரைன் மருத்துவ கல்லூரிகளில் படித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் பயின்ற டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும், அவர்களது பெற்றோரும் டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் முன்பு நேற்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது அந்த மாணவர்கள், தங்கள் கல்வியாண்டு இழப்பைத் தடுக்க இந்த ஒருமுறை மட்டும் தங்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்கள்.

மருத்துவ மாணவர்கள் எதிர்கால டாக்டர்கள் என்பதால், ஆன்லைன் வழிக் கல்வி என்பது சரியாக இருக்காது. எனவே அவர்களை இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உக்ரைன் இந்திய மருத்துவ மாணவர்களின் பெற்றோர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதமும் இந்த மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை இந்த ஒருமுறை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கலாம் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கமும் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story