டேராடூன் - டெல்லி இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்!


டேராடூன் -  டெல்லி இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்!
x

நாட்டின் 17வது வந்தே பாரத் ரெயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும். இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி, நாளை காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன் மற்றும் டெல்லி இடையே ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய ஐந்து ரெயில் நிலையங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் இருந்து டெல்லி வரை இந்த ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.


Next Story