மணிப்பூரில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு


மணிப்பூரில் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு
x

மணிப்பூரில் வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் குணமடைய பல ஆண்டுகள் ஆகும் என ராகுல்காந்தி கூறினார்.

கோழிக்கோடு,

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, தனது தொகுதியான கேரள மாநில வயநாட்டிற்கு இரு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று கோடஞ்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடரும் வன்முறைகள் கவலையளிப்பதாகவும், வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மணிப்பூரில் வன்முறையால் ஏற்பட்ட காயங்கள் குணமடைய பல ஆண்டுகள் ஆகும் என கூறிய அவர், ஒரு மாநிலத்தில் பிளவு, வெறுப்பு மற்றும் கோப அரசியலைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதற்கு மணிப்பூர் ஒரு பாடம் என்றும் தெரிவித்தார்.


Next Story