இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்; பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
பசுவதையில் ஈடுபடுபவர்களை கொலை செய்யுங்கள் என்று பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ எம்.எல்.ஏ கியான் தேவ், பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள், நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், பாஜக மத ரீதியிலான பயங்கரவாதத்தைப் பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைவிட என்ன ஆதாரம் தேவை என தெரிவித்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ கருத்து சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாஜக, கியான் தேவ் கருத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story