சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது?


சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது?
x

பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது? என்று பிரதமர் மோடிக்கு சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேங்காய் உற்பத்தி

பிரதமர் மோடி மண்டியா பகுதி விவசாயிகளின் பிரச்சினைகள் என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். சாம்ராஜ்நகர், மண்டியா, சாம்ராஜ்நகரில் மஞ்சள் அதிகமாக சாகுபடி செய்கிறார்கள். ஆனால் அந்த மஞ்சள் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். கர்நாடகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா?.

நாட்டின் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகத்தின் பங்கு 31 சதவீதம். தற்போது கொப்பரை தேங்காய் விலை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு வேளாண் சந்தைகளை பலவீனப்படுத்தியது காரணம் இல்லையா?. மத்திய அரசு பாக்குகளை வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்கிறது.

கரும்பு விவசாயிகள்

இதனால் இந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் பாக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக பாக்கு விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த பாக்கு விவசாயிகளின் பாதிப்புக்கு பிரதமர் மோடி காரணம் இல்லையா?. பா.ஜனதாவை சேர்ந்த மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ.வின் வீட்டில் லோக்அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் ரூ.8 கோடி சிக்கியது. மத்திய அரசின் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் என்ன செய்கிறது?. இந்த திருட்டுத்தனமான விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியவில்லையா?.

கரும்பு விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பா.ஜனதா அரசுகள் தீர்வு காணவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் வண்ணமயமான பேச்சுகளை கேட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். மோடியின் வெறும் பேச்சுகள் தேவை இல்லை. நான் எழுப்புயுள்ள இந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story